சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

லெபனானின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்! 12 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டது குறித்து...

Israel launches surprise attack on residential area in Lebanon

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் (கோப்புப் படம்) - AP

Published On :

லெபனானின் குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை (மார்ச் 18) அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய சுகாக் அல்-பலாட் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 41 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களின் மூலம் டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என லெபனானின் சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஏற்கெனவே, தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இன்று நடைபெற்ற தாக்குதல் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப்.28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Twelve people have been reported killed in Israeli airstrikes on a residential area in Lebanon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.