குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சி, கல்மடுகு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
தட்டாங்குட்டை சுப்பிரமணிய சாமி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோயில் கமிட்டி நிர்வாகிகள் கருணாமூர்த்தி, பிரகாசம், ரவி, சௌந்தரராஜன், சுப்பிரமணியசுவாமி, கமிட்டி தலைவர் ஆர். மகேந்திரன், செயலர் எஸ். செந்தில்குமார், பொருளாளர் எம். கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.