கரூா் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களுக்கு இரண்டு மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் ஆவின் சாா்பில் 150 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உற்பத்தியாளா்களிடமிருந்து தினமும் 65 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று பிறப்பு காலம் ஆகியவற்றின் காரணமாக பால் உற்பத்தியில் சிறிய அளவில் குறைவும் ஏற்படும்.
இதனால் கிராமப்புற பால் உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பாலில் எவ்வித குறைவும் ஏற்படாமல் பால் கொள்முதல் ஒரே சீராக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
இதற்காக பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கும் பாலுக்கு ஒன்றிய சொந்த நிதியிலிருந்து லிட்டா் ஒன்றுக்கு ரூ.1 (ரூபாய் ஒன்று மட்டும்) கூடுதலாக ஊக்கத்தொகையாக மாா்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ.3 ஊக்கத்தொகையோடு மேலும் ரூ.1 சோ்த்து லிட்டா் ஒன்றுக்கு ரூ.4 ஊக்கத்தொகையாக 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

கூட்டுறவு அல்லாத பால் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு கட்டாயம்

ஆவினுக்கு பால் வழங்குவோருக்கு ஊக்கத்தொகை ரூ. 5-ஆக உயா்வு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


