தொழிற்சாலைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை படிப்படியாகக் களைந்து முழுவதும் பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் வேலூர் மாவட்ட இணை இயக்குநர் எம்.ஏ.முகமதுகனி தெரிவித்தார்.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பாதுகாப்பு மாத விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எம்.ஏ.முகமதுகனி பேசியதாவது:
தொழிலாளர்கள் பணிக்காக புறப்படும் போதே வீட்டில் இருக்கும் பிரச்னைகளை மறந்து தொழிற்சாலை பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற கவனத்துடன் புறப்பட வேண்டும். இதற்கு தொழிலாளர்களின் மனைவிகளும் அவர்களுக்கு உதவ வேண்டும். தொழிற்சாலையில் தொழிலாளர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவரது குடும்பம் சிறப்பாக விளங்கும்.
அரக்கோணம் எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதம் நடைபெற்ற பாதுகாப்பு மாத விழாவில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் களையப்பட்டுள்ளதாகவும், தற்போது எம்ஆர்எப் குழுமத்தின் அரக்கோணம் தொழிற்சாலை முழுவதும் பாதுகாப்பான தொழிற்சாலையாக மாறியுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்திலேயே முழுவதும் பாதுகாப்பாக மாறியுள்ள தொழிற்சாலைகளின் முன்னோடியாக எம்ஆர்எப் தொழிற்சாலை விளங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் பாதுகாப்பு என்பது அந்தந்த தொழிலாளர்களின் மனதில் ஆழப்படிந்து விட்டது. எனவே, தொழிற்சாலைகளில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் அவசியம் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு, ஆலையின் பொது மேலாளர் கே.வி.எஸ்.ரவிபிரகாஷ் தலைமை வகித்தார். ஆலையின் உற்பத்திப் பிரிவு மேலாளர் இசக்கிராஜன், மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் என்.ஆர்.மணி, தொழிற்சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஆலை மக்கள் தொடர்பு அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழிற்சங்கச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

விஜய்யை மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

