மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு: 20 சங்கங்களுக்கு ஏப்.2-இல் வாக்குப்பதிவு

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான முதல்கட்டத் தேர்தலில் 162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி

Updated On :29 மார்ச் 2018, 7:37 pm

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான முதல்கட்டத் தேர்தலில் 162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி  வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்காலம் மே மாதம் முதல் வாரம் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை, கைத்தறி, பால்வளம், வீட்டுவசதி, கதர் கிராமம் என 9 துறைகளின் கீழ் 675  கூட்டுறவு சங்கங்களில் 6,973 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இக்கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் 4 நிலைகளாக நடக்கிறது.
முதல்கட்டமாக 186 கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. 
இதில், கூட்டுறவு இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூரிலுள்ள 28 சங்கங்களில் 540 பேரும், ராணிப்பேட்டையில் உள்ள 28 சங்கங்களில் 1,041 பேரும், திருப்பத்தூரில் உள்ள 25 சங்கங்களில் 1,023 பேரும் என மொத்தம் 2,604 பேரும், சார்-பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள 105 சங்கங்களில் 1,396 பேரும் என மொத்தம் 4 ஆயிரம் பேர் மனு தாக்கல் 
செய்தனர். 
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 27-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. 
இதில், பல்வேறு காரணங்களைக் காட்டி ஏராளமான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் சங்க தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பல கூட்டுறவு சங்கங்களில் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற புதன்கிழமை (மார்ச் 28) கடைசி நாளாகும். 
இதையடுத்து, பல சங்கங்களில் மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, இறுதிப்பட்டியல் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
இதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கோட்டங்கங்களில் இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 81 கூட்டுறவு சங்கங்களில் 62 சங்கங்களுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், 2 சங்கங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 15 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. 
இதேபோல், சார்-பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 105 சங்கங்களில் 100 சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
மற்ற 5 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன்படி, மொத்தம் 20 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.