அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

மலை வளைவுகளில் நடமாடும் கால்நடைகள் : வாகன ஓட்டிகள் அவதி

ஏலகிரி மலை வளைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் ஏழைகளின் ஊட்டி

News image

ஏலகிரி மலை வளைவுகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ஏலகிரி மலை வளைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் ஏழைகளின் ஊட்டி எனப்படுவது ஏலகிரி மலையாகும். திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் பொன்னேரியில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்லும் பாதைத் தொடங்குகிறது.
மலைக்குச் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், மலை வளைவுப் பாதைகளில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இந்தக் கால்நடைகள் சாலையைக் கடந்துச் செல்லும் வரை வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வளைவுகளில் இறங்கும் போது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மலைச் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதைத் தடுக்கவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.