அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 23) முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெறுகிறது.
அனைத்து வட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அனைத்து கிராமக் கணக்குகளும் துணை ஆட்சியரால் தணிக்கை செய்யப்படும். அப்போது பொதுமக்களும் தங்களது குறைகள் குறித்து மனுக்கள் அளிப்பர். அரக்கோணம் வட்டத்தில் இந்த ஆண்டு ஜமாபந்தி மே 23-ஆம் தேதி தொடங்குகிறது. வேலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துனை ஆட்சியர் பேபி இந்திரா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார்.
இதுகுறித்து வட்டாட்சியர் ஆர். பாபு கூறியதாவது:
மே 23, 24 ஆகிய இரு நாள்கள் அரக்கோணம் தெற்கு உள்வட்ட கிராமங்களின் கணக்குகளும், 24, 25, 29 ஆகிய தேதிகளில் பாராஞ்சி உள்வட்ட கிராமங்களின் கணக்குகளும், 29, 30, 31 ஆகிய தேதிகளில் பள்ளூர் உள்வட்ட கிராமங்களின் கணக்குகளும் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அரக்கோணம் வடக்கு உள்வட்ட கணக்குகளும் தணிக்கை செய்யப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த நாள்களில் குறைகளை மனுவாக எழுதி தனித் துணை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.
நிலவரிக் கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத் திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்டப் பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படும்.
தணிக்கை நாள்களுக்கு முன்னதாகத் தரப்படும் மனுக்களும் தணிக்கை நாளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அஞ்சல் மூலமாக மனுக்களை அனுப்புவோர், ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது வட்டாட்சியருக்கோ அனுப்பலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

