கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பிஎஸ்என்எல் மெகா கட்டண  சலுகைத் திட்டம் அறிவிப்பு

தீபாவளி விழாக்கால சிறப்புத் தள்ளுபடியாக பிஎஸ்என்எல் பல்வேறு தொலைபேசி கட்டணச் சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளது.

Updated On :22 அக்டோபர் 2018, 12:29 am

தீபாவளி விழாக்கால சிறப்புத் தள்ளுபடியாக பிஎஸ்என்எல் பல்வேறு தொலைபேசி கட்டணச் சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் வேலூர் மண்டல முதன்மைப் பொது மேலாளர் கே.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனலட்சுமி திட்டத்தின்கீழ் இம்மாதத்துக்குரிய தொலைபேசிக் கட்டணத்தை தவணை தேதிக்குள் செலுத்துவோருக்கு அடுத்த மாதக் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்பட உள்ளது. என்டர்பிரைஸ் பிசினஸ் மூலமாக வாங்கிய தனி சர்க்யூட்டுகளுக்கு இந்தச் சலுகை 2 சதவீதமாக அளிக்கப்படுகிறது. மேலும், அடுத்த 5 மாதங்களுக்கு உரிய கடந்த 6 மாதங்களின் சராசரி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துவோருக்கு இனிவரும் 5 மாதங்களில 3 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட உள்ளது. இந்த மெகா சலுகையை நவம்பர் 7ஆம் தேதி வரை தொலைபேசி கட்டணம் செலுத்துவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். 
மேலும், மாத வாடகைக்கு பதில் ஆண்டு வாடகையை முன்கூட்டியே செலுத்துவோருக்கு ஓராண்டுக்கு 2 மாத கட்டணச் சலுகையும், 2 ஆண்டுகளுக்கு 5 மாத கட்டணச் சலுகையும், 3 ஆண்டுகளுக்கு 8 மாத கட்டணச் சலுகையும் அளிக்கப்படும். இதையொட்டி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் அலுவலக வாடிக்கையாளர் சேவை மையங்களும் நவம்பர் 7-ஆம் தேதி வரை அனைத்து விடுமுறை நாள்களிலும் வழக்கம்போல் செயல்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.