சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற மாணவர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வாணையர் பி.செந்தில் குமார் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டம், காவேரிப்பாக்கம் கலை, அறிவியல் கல்லூரியில் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
ஆர்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் வி.பாலு, செயலர் வி.சேகர், பொருளாளர் க.சுந்தரம், இணைச்செயலர் கே.பி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வாணையர் பி.செந்தில்குமார் பங்கேற்று, 98 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: மாணவ, மாணவிகள் பட்டப்படிப்புகள் பயின்று பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் நடத்தப்படும் கல்லூரி இது. இன்றைய தினம் பட்டங்கள் பெறும் மாணவ, மாணவிகள் திருக்குறளின் நன்றியுடமை அதிகாரத்தை மனதில் நிறுத்தி, தாய், தந்தை, கற்றுக்கொடுத்த ஆசிரியர், படித்த கல்லூரியை மறவாமல் நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, வெற்றிகளைப் பெற்றிட தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். தொலைக்காட்சி, செல்லிடப் பேசி, இணையதளம் ஆகியவை மாணவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்கின்றன. அவற்றைத் தவிர்க்க எண்ணம் தூய்மையாகவும், வலிமையாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்.எம்.முகமது தாஹா, துணைத் தலைவர்கள் டி.ஆர்.ரம்யா, ஆர்.லாரன்சியா, ஐ.நாகராஜன், ஜி.செந்தில்குமார், கே.சங்கீதா, எம்.ஷமினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

