சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குடியாத்தம் வனத்துறையும், நகராட்சி மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை திங்கள்கிழமை நடத்தின.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:19 pm

குடியாத்தம் வனத்துறையும், நகராட்சி மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை திங்கள்கிழமை நடத்தின.
 நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் தொடங்கிய ஊர்வலத்துக்கு, பள்ளித் தலைமையாசிரியை எம்.கீதா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் என்.ஜெய்சங்கர் வரவேற்றார். குடியாத்தம் வனச்சரக அலுவலர் பி.பாலாஜி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வனவர் வி.அரி, வனக் காப்பாளர்கள் எஸ்.செல்வராஜ், ஆர்.விஜயன், கே.சிவன், க.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.