ஆற்காடு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆற்காடு பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸார் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில், எசையனூர் பாலாற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், லாரியை ஓட்டி வந்த மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (28), எசையனூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற கார்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!
மேற்கு வங்கத்தில் அதிகாரம் யாருக்கு? வெளியானது கருத்துக் கணிப்பு

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

