
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வேலூரில் 400 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய லேசர் ஒளிக்காட்சி அரங்கம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தில் ரூ. 1,415 கோடி மதிப்பில் பல்வேறுகட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், முதல்கட்டமாக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டடுக்கு பேருந்து நிறுத்தம், நேதாஜி வணிக வளாகத்தில் அடுக்குமாடி வளாகம், பாலாற்று படுகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய பூங்காக்கள், அடுக்குமாடி கார் நிறுத்துமிடம், நவீன சாலை, விளையாட்டு உபகரணங்களுடன்கூடிய பூங்காக்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர, வேலூர் கோட்டையில் சுற்றுலா மேம்பாடு, தகவல் பரிமாற்றம், கண்காணிப்பு கேமராக்கள், சோலார் மின் உற்பத்தி என 9 பணிகளுக்கான திட்டஅறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படுள்ளன. இதனிடையே, ரூ. 33 கோடியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர் கோட்டை சீரமைக்கப்பட்டு அதன் தோற்றத்தை பிரமாண்டமாக வெளிப்படுத்தும் வகையில் லேசர் ஒளி காட்சி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. கோட்டை அகழியை தூர்வாரி சுத்தம் செய்து படகுசவாரி தொடங்கப்பட உள்ளது. அலங்கார மின்விளக்கு, சிற்றுண்டி உணவகத்துடன் கூடிய திறந்தவெளி திரையரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இதன்தொடர்ச்சியாக, 400 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரமாண்ட லேசர் ஒளி காட்சி அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இதில், வரலாற்று நிகழ்வுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் லேசர் ஒளியில் பல வண்ணங்களில் 30 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நகராட்சி நிர்வாக ஆணையரக ஒப்புதலுக்குப் பிறகு பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






