
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ஜெ.பார்த்திபன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய தா.செங்கோட்டையன், தமிழக ஆளுநரின் துணைச் செயலராக கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு வேலூர் மாவட்ட வருவாய் பணிகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஜெ.பார்த்திபன், 2012-ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்ற அவர், 2013-15-இல் பொன்னேரி, உத்தமபாளையம் கோட்டாட்சியராகவும், 2015-16-இல் தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் (பொது), 2016-17-இல் தேசிய பேரிடர் மேலாண்மை உதவி ஆணையராகவும், 2017-18-இல் பவானிசாகர் அரசுப் பணியாளர் பயிற்சி நிலைய முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஜெ.பார்த்திபனுக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி. பிரவேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






