இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: ஜி.கே. மணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
வேலூர் காட்பாடியில் வியாழக்கிழமை, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது: 
தமிழ்நாட்டில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாலாறு வறண்டுள்ளதால் பாமக சார்பில் "பாலாறு பாதுகாப்போம், பாசனத்தை பெருக்குவோம்' என்ற விழிப்புணர்வு பிரசாரப் பயணம் வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பிரசாரப் பயணத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறார். 
வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூரில் 22-ஆம் தேதி தொடங்கும் பயணம் வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை வழியாக காவேரிபாக்கம் சென்றடைகிறது. 
அன்று இரவு வேலூரில் பொதுக்கூட்டம் நடைபெறும். 23-ஆம் தேதி காலை தாமல் பகுதியில் தொடங்கும் பிரசாரப் பயணம் வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், கல்பாக்கம் அருகே முடியும். அன்று இரவு காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும். 
பிரசார விழிப்புணர்வு பயணம் அரசியல் ரீதியாக இல்லாமல் நீர்மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் நடைபெறுகிறது.  பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டும் தடுப்பணைப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுத்து, தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாமக சார்பில் வரவேற்கிறோம்.
எனவே, தமிழக அமைச்சரவையை அரசு உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர். 
மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கே.எல்.இளவழகன், சரவணன், முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.