6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

15-ஆம் தேதிக்குள் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்  உத்தரவிட்டுள்ளார். 

Published On :

அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்  உத்தரவிட்டுள்ளார். 
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து,தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு இல்லாத சூழலை உருவாக்கும் வகையில் "பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு இல்லாத பள்ளி' என்ற அறிவிப்பை அனைத்துப் பள்ளிகளின் முன் வைக்க வேண்டும். பள்ளிகளில் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். 
இதுதொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள்,
 சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.