
காவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகப் பகுதியில் உள்ள உணவகக் கட்டட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த காவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக இயக்குநர்கள் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் சி.ஜி.ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் லோகநாதன், துணைத் தலைவர் எம்.ஆறுமுகம், இயக்குநர்கள் ஆர்.ஜெயவேல், ஜெ.ஞானபிரகாசம், வி.வில்சன், ஆர்.கோபி, என்.பாபு, எஸ்.மோகனா, என்.யசோதா, இ.சுசீலா, ஜி.ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சங்க அலுவலக வளாக இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, அதில் உணவகம் நடத்தப்பட்டு வருவது நிலஅளவைத் துறை மூலம் அளந்து பார்த்தபோது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகக் கட்டட ஆக்கிரமிப்பை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்பது, தொடர்ந்து சங்கத்தில் நகைக்கடன், நெற்பயிர், மல்லிப்பூ சாகுபடி கடன், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் ஆகியவற்றை சங்க விதிமுறைக்கு உள்பட்டு தொடர்ந்து வழங்குவது என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





