ஆற்காடு அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை நெமிலி அருகேயுள்ள மகேந்திரவாடி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் (40) ஓட்டிச் சென்றார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் சென்னையிலிருந்து ஒசூர் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்து நடத்துநர் முனுசாமி (35), பயணிகள் வேலூர் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்த அஜித் (22), சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர் (40), பெங்களூரைச் சேர்ந்த சரவணன் (44) உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


