தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ்நாடு

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கற்கள், காலணிகள், முட்டைகளை வீசி தாக்கியதைத் தொடா்ந்து, தலைக்கவசம் அணிந்து வந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி எம்.பி. - படம்: தினமணி

Updated On :19 வினாடிகள் முன்பு
6:08 am, 31 மே 2026

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

6:03 am, 31 மே 2026

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது!

மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்ததாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

5:50 am, 31 மே 2026

உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை...

5:45 am, 31 மே 2026

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தேசிய பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் அவர் தாக்கப்பட்டார் என்றும் அந்த மாநில அமைச்சர் திலீப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

5:45 am, 31 மே 2026

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

5:45 am, 31 மே 2026

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நிகழ்ந்த தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஒருவரை சுட்டுப் பிடித்ததுள்ளனர்.

5:38 am, 31 மே 2026

திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!

திருச்சி கிழக்குத் தொகுதி உள்பட திருச்சி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜோசப் விஜய் நாளை(ஜூன் 1) திருச்சி செல்கிறார்.

5:38 am, 31 மே 2026

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

திருவள்ளுவரைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

5:36 am, 31 மே 2026

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க நடைபெற்றதாகக் கூறப்படும் முயற்சிகள் தொடர்பாக வெளிவராத உண்மைகள் பற்றி...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.