லக்னௌ : உத்தரப் பிரதேசத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காஸியாபாத் அருகே கோதா பகுதியில் கடந்த மே 28-ஆம் தேதி சூர்ய பிரதாப் சௌஹான் என்ற 17 வயது சிறுவனுக்கும் அவரது நண்பர்கள் குழுவுக்கும் இடையே மோட்டார் சைக்கில் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. சண்டை முற்றியதில் சௌஹானை அவரது நண்பர்கள் குழு கத்தியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 29-இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை வழக்குப் பதிந்து காவல் துறை நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் 5 நபர்களுக்கு தொடர்பிருப்பதை உறுதி செய்தனர். அவர்களில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஆஸாத் என்ற நபர் தலைமறைவானார். அவரைப் பற்றிய துப்பு அளித்தால் ரூ. 50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், அந்த நபர் மறைந்திருந்த இடம் போலீஸாருக்கு தெரிய வரவே, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் ஆஸாத்தைப் பிடிக்க முயன்றபோது அவர்களை நோக்கி தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஆஸாத் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஆஸாத் தப்பியோட முயன்றாராம்.
அப்போது காவல் துறையினர் அவரைச் சுட்டுப் பிடித்தனர். அதில் பலத்த காயமடைந்த ஆஸாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Summary
Ghaziabad: Main accused in the murder of UP student Surya Chauhan killed in a police encounter
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12ஆம் வகுப்பு மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு
இம்தியாஸ் அலி இயக்கிய மெய்ன் வாபஸ் ஆவுங்கா டிரைலர்!

ரெளடி சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டா் வழக்கு: 22 போ் விடுதலையை உறுதி செய்த மும்பை உயா்நீதிமன்றம்

குருகிராம்: முன்னாள் என்எஸ்ஜி கமாண்டோ சுட்டுக் கொலை
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


