மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள், மே 5 ஆம் தேதி, வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ராஜீப் சர்க்கார் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரில், கடந்த ஏப்ரல் 27 முதல் மே 3 வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் அபிஷேக் பானர்ஜி, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
மேலும், அபிஷேக் பானர்ஜியின் இந்த கருத்துகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்புடையவை என்றும் புகார்தாரர் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையின் ஒருபகுதியாக தேர்தல் நேரத்தில் அவர் பேசிய கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றியதன்மூலம் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்து ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
A case has been registered against Trinamool Congress MP Abhishek Banerjee for making remarks aimed at inciting violence during the elections in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் பானர்ஜி வீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் சோதனை?

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது!

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




