நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டார் என்று பாஜக தெரிவித்தது தொடர்பாக...

திலீப் கோஷ் - படம் - ஏஎன்ஐ

Published On :31 மே 2026, 2:33 pm IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தேசிய பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் அவர் தாக்கப்பட்டார் என்றும் அந்த மாநில அமைச்சர் திலீப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் சோனார்பூர் பகுதிக்கு அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை (மே 30) சென்றாா்.

அந்த நேரத்தில், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகள், கற்கள், காலணிகள் போன்வற்றை வீசியும் அவரைக் கையால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து திலீப் கோஷ் தெரிவித்ததாவது:

இதுமாதிரியான வன்முறை நடந்திருக்கக் கூடாது. சட்டத்தை தங்கள் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நபரும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். மக்களுடைய கோபம் எங்காவது வெளிப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

தேர்தல் முடிவுகளைப் பார்த்தபோதே நிலைமை புரிந்திருக்க வேண்டும். கதாநாயகனாக நடிக்க ஏன் அங்கு சென்றார்? 22 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்புடன் சுற்றித் திரியும் ஒருவர் அப்படி ஒரு கதாநாயகனைப் போல நடிக்க முயன்றால் என்ன ஆகும்? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார்கள். அவர்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். நீங்கள் ஏன் மக்களுக்கு இந்த வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள்? என்று தெரிவித்தார்.

Summary

The BJP stated that Abhishek Banerjee was attacked because he attempted to act like a hero.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.