நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எருதுவிடும் விழா போட்டியில் வெற்றி பெற்ற காளை கிணற்றில் விழுந்து சாவு: அமைச்சர், பொதுமக்கள் அஞ்சலி

வாணியம்பாடி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த எருது விடும் விழாவின்போது, குறைந்த நேரத்தில் எல்லையைக் கடந்து

Updated On :23 ஜனவரி 2019, 8:39 am IST

வாணியம்பாடி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த எருது விடும் விழாவின்போது, குறைந்த நேரத்தில் எல்லையைக் கடந்து முதல் பரிசைத் தட்டிச் சென்ற காளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் எருதுவிடும் திருவிழாவுக்கு வந்திருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் 153-ஆம் ஆண்டு மயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 10 முதல் 3 மணி வரை இப்போட்டி நடைபெற்றது. 
இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இப்போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கைக் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல்பரிசை வள்ளிப்பட்டைச் சேர்ந்த வாயுபுத்திரன் என்ற எருது  மோட்டார் சைக்கிள் பரிசை தட்டிச் சென்றது. 2-ஆவது பரிசை வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொல்லாதவன் என்ற காளையும், 3-ஆவது வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் காளையும் பெற்றன. அதேபோல் வேகமாக ஓடிய 25 காளைகளுக்கு  விழாக் குழுவினர் பரிசுகள் வழங்கினர்.
கிணற்றில் தவறி விழுந்து சாவு: இந்நிலையில் முதல் பரிசு பெற்ற காளையான வாயுபுத்திரன் 2-ஆவது சுற்று இறுதியில் குறிப்பிட்ட எல்லையைக் குறைந்த நேரத்தில் கடந்து சென்றது. 
அதைத் தொடர்ந்து அக்காளை நிற்காமல் தொடர்ந்து வேகமாக ஓடியபோது, சாலையோரக் கிணற்றில் தவறி விழுந்தது. இக்காளை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சம்பத்குமாருடையது ஆகும்.
இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் காளையை மீட்க போராடினர். அத்துடன் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் காளையை மீட்க முற்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட காளை சிகிச்சைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தது. இதை அறிந்த எருதுவிடும் விழாக் குழுவினர், அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த காளையின் உடல் வள்ளிப்பட்டில் உள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சம்பத்குமார் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காளையின் உடலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திரளான பொதுமக்களும், மாவட்ட எருதுவிடும் விழா சங்க நிர்வாகிகளும் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அந்த காளையின் உடல்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த காளை தொடர்ந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த எருதுவிடும் திருவிழாக்களில் பங்கேற்று தொடர்ந்து முதல் பரிசை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.