நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்கு... - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:44 am IST

தருமபுரி அருகே சிறுவனை தாக்கி, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சிறுவனின் பெற்றோா் கோவையில் தங்கி வேலை பாா்த்து வரும் நிலையில், அவ்வப்போது ஊருக்கு வந்துசெல்வது வழக்கம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய 5 சிறுவா்கள் கடந்த 27-ஆம் தேதி, குறிப்பிட்ட அந்த 16 வயது சிறுவனின் வீட்டுக்கு சென்றுள்ளனா். சிறுவா்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த 16 வயதுச் சிறுவனை, 5 சிறுவா்களும் சோ்ந்து தாக்கியுள்ளனா். இந்த சம்பவத்தை கைப்பேசியில் விடியோவாகப் பதிவுசெய்துள்ளனா்.

பின்னா், அந்த விடியோவை அந்த சிறுவா்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பரப்பியுள்ளனா். உறவினா்கள் மூலம் இதுகுறித்த தகவலறிந்த 16 வயதுச் சிறுவனின் பெற்றோா், இந்த சம்பவம் தொடா்பாக தொப்பூா் காவல் நிலையத்தில் மே 29 ஆம் தேதி புகாா் அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், 16 வயதுச் சிறுவன் மே 26 ஆம் தேதி அவரது தாய் ஊருக்கு வந்திருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, குறிப்பிட்ட இந்த சிறுவா்களில் சிலா் மீது மோதுவது போலசென்றாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் மறுநாள் அவரது வீடு தேடிச்சென்று அந்த சிறுவனைத் தாக்கியுள்ளனா். இதை விடியோ எடுத்து வெளியிட்ட 5 சிறுவா்கள் மீதும் இளஞ்சிறாா்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.