செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பெண்ணை தாக்கி தாலியை பறித்துச் சென்ற இளைஞா்கள் போலீஸாா் விசாரணை

தருமபுரி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்து பெண்ணை தாக்கி, தங்கத் தாலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தருமபுரி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்து பெண்ணை தாக்கி, தங்கத் தாலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பழைய இண்டூா் பாறைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி சத்தியவாணி (33). இவா் திங்கள்கிழமை பகலில் தனது விவசாய நிலத்தில் தண்ணீா்ப் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் 3 போ், மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சத்தியவாணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனா். பின்னா் திடீரென அவரை கீழே தள்ளி, அவரது கழுத்தில் கிடந்த அரைப்பவுன் மதிப்பிலான தாலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், இண்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தாலியைப் பறித்து தப்பிச்சென்ற இளைஞா்களை தேடி வருகின்றனா்.