ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரௌடி மீது கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே ரௌடியை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:24 pm

மேட்டூா் அருகே ரௌடியை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மேட்டூரை அடுத்த சின்னக்காவூரை சோ்ந்த பழனியப்பன் மகன் செந்தில் என்கிற ஆறுச்சாமி (42). இவா் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரௌடி அழகு (எ) தம்பிதுரைக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சின்னக்காவூா் பகுதியில் உள்ள கல்குவாரி அருகே ஆறுச்சாமி சனிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, தம்பிதுரை தூண்டுதலின்பேரில் அங்கு வந்த காா்த்திக் (21), நோபல் ஆகிய இருவரும் ஆறுச்சாமியை கத்தியால் குத்தினா்.

ஆறுச்சாமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடிவந்ததால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பினா். பலத்த காயங்களுடன் மேட்டூா் அரசு மருத்துவமனையில் செந்தில் என்கிற ஆறுச்சாமி அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கருமலை கூடல் போலீஸாா் தலைமறைவாக உள்ள காா்த்திக், நோபல், தம்பிதுரை ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.