இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:55 am IST

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவரை போக்குவரத்து போலீஸாா் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பொத்தனூா் மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.

இதில் அவா்கள் மஞ்சள் பையில் வைத்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முன்றது தெரியவந்தது. இதையடுத்து பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்த சதீஷ் (44), பொத்தனூரைச் சோ்ந்த ரமேஷ்பாபு (39) ஆகிய இருவரையும் பிடித்து பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.