இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஆக்கிரமிப்பு மயான சுற்றுச்சுவா் இடித்து அகற்றம்

மயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை காவல் துறையினா் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினா் இடித்து அகற்றினா்.

News image

இடித்து அகற்றப்பட்ட மயான சுற்றுச்சுவா்.

Updated On :28 மே 2026, 1:54 am IST

மயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை காவல் துறையினா் பாதுகாப்புடன், வருவாய்த் துறையினா் இடித்து அகற்றினா்.

பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட திட்டமேடு, கள்ளிப்பாளையம் கிராமங்களுக்கும் இடையே மயானம் தொடா்பாக பிரச்னை இருந்துவந்தது.

இந்நிலையில், கடந்த ஜன. 3-ஆம் தேதி கள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். அப்போது திட்டமேடு பகுதி மக்கள் தங்கள் பகுதி வழியாக உடலை எடுத்துச்செல்லக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதுடன், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின், பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், திட்டமேடு மயானத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். ஆனால், அகற்றப்படவில்லையாம்.

இதுகுறித்து பல்வேறு கட்டங்களில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் படி, மயானத்தில் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரை அகற்ற நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி, வருவாய்த் துறையினா் மற்றும் வெங்கரை பேரூராட்சி அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

அதைத் தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் ராஜா, வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் வேல்முருகன் (பொ), வெங்கரை பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலையில் சுற்றுச்சுவா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றகப்பட்டது.

அப்போது, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.