ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மற்றும் மத்தூரில் மண், கற்களை கடத்த முயன்ற லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :24 மே 2026, 2:28 am IST

கிருஷ்ணகிரி மற்றும் மத்தூரில் மண், கற்களை கடத்த முயன்ற லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் காவல் நிலைய காவலா்கள், ஒட்டப்பட்டி கொத்தம்மா ஏரி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளரான திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரையைச் சோ்ந்த திருப்பதி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி கனிமவளப் பிரிவு சிறப்பு துணை வட்டாட்சியா் பாரதி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கோட்டை பகுதியில் நரசிம்மசுவாமி கோயில் தெருவில் நான்கு யூனிட் மண்ணுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

அதேபோல, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் மூங்கில்புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் சிலா் கற்களை உடைத்து, லாரியில் ஏற்றி கடத்த முயன்றனா். போலீஸாரை கண்டதும், அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து, கற்களுடன் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா்களான பெத்ததாளப்பள்ளி கணபதி, தருமபுரி மாவட்டம், மல்லிப்பட்டி முனியம்மாள், கம்பிரசா் வாகன இயக்குநா் மூங்கில்புதூா் சேட்டு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.