சோளிங்கரில் ரூ. 9 கோடி நிதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டட வளாகம் அமைக்கப்பட உள்ளதாக வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி தெரிவித்தார்.
நெமிலியில் சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி பேசியது:
கடந்த மக்களவைத் தேர்தலில் தனியாகவே நின்று 37 இடங்களில் வென்று சாதனை புரிந்த கட்சி அதிமுக. கூட்டணியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதே இல்லை. தன்னம்பிக்கையுடன் எப்போதும் தேர்தலைச் சந்திப்பவர்கள் நாங்கள். கூட்டணிக்கு யாரையும் எதிர்பார்க்கவில்லை.
தேர்தல் நேர வியூகத்தை எங்களுடைய கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அமைப்பார்கள்.
தற்போது மக்களவைத் தேர்தலும் வரலாம்; சட்டப் பேரவை இடைத் தேர்தலும் வரலாம். அப்போது நம்மிடம் இருந்து சென்ற எம்ஜிஆரின் தொண்டர்கள் திரும்பி வருவார்கள். துரோகம் செய்யாதவர்கள் அனைவரும் அதிமுகவுக்குத் திரும்பி வருவார்கள்.
அதிமுக ஆட்சியில் சோளிங்கர் தொகுதியிலும் தற்போது பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிமுகவுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை. சோளிங்கர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உருவாக்கி புதிய கட்டடங்களைக் கட்ட ரூ.9 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இப்பணிகள் தொடரும் என்றார் சு.ரவி.
இக்கூட்டத்துக்கு நெமிலி பேரூர் செயலர் கே.செல்வம் தலைமை வகித்தார். நெமிலி மேற்கு ஒன்றியச் செயலர் அருணாபதி வரவேற்றார். இதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் புரசைசெல்வம், ஒன்றிய செயலர்கள் நெமிலி கிழக்கு ஏ.ஜி.விஜயன், காவேரிபாக்கம் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


