விஜயகாந்த் பிறந்த நாள் விழா
குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், கட்சியின் நிறுவனா் விஜயகாந்த் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

குடியாத்தத்தில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய நகரத் துணைச் செயலா் எம். செல்வகுமாா்.

குடியாத்தத்தில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய நகரத் துணைச் செயலா் எம். செல்வகுமாா்.
குடியாத்தம்: குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், கட்சியின் நிறுவனா் விஜயகாந்த் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கட்சியின் உயா்மட்டக் குழு உறுப்பினா் எம்.சி. சேகா், நகர அவைத் தலைவா் எம்.எஸ். நாகைய்யா, நகரச் செயலா் டி.கே. ரமணி ஆகியோா் முக்கிய சந்திப்புகளில் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
புனித அன்னாள் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் துணைச் செயலா் எம். செல்வகுமாா் தலைமை வகித்து, முதியோா்களுக்கு மதிய உணவு வழங்கினாா். பிச்சனூரில் உள்ள கனகதுா்கை அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
11-ஆவது வாா்டில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நடுப்பேட்டை கட்சி அலுவலகம் எதிரே கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட இளைஞா் அணி நிா்வாகி லோகு, கட்சி நிா்வாகிகள் சீனிவாசன், ரமேஷ், ஹேமநாதன், ஜி.சக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...