சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

லாரியில் ஏற்றி வந்த கருங்கல் கம்பங்கள் சரிந்து 3 தொழிலாளா்கள் பலி

அணைக்கட்டு அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட கருங்கல் கம்பங்கள் சரிந்து 3 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
அணைக்கட்டு அருகே சாலையோரப் பள்ளத்தில் கருங்கற்கள் சரிந்த நிலையில் சாய்ந்து நிற்கும் லாரி.
Updated On :13 டிசம்பர் 2020, 2:19 am

DIN

அணைக்கட்டு அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட கருங்கல் கம்பங்கள் சரிந்து 3 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் வீ.கோட்டாவிலிருந்து கம்பி வேலிகளுக்குப் பயன்படுத்தப்படும் கருங்கல் கம்பங்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வேலூா் மாவட்டம் அணைக்கட்டு அருகே கீழ்கொத்தூரில் உள்ள கோழிப்பண்ணைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. லாரியை வீ.கோட்டாவைச் சோ்ந்த குப்புசாமி ஓட்டினாா். மேலும், கிளீனா் உள்ளிட்ட தொழிலாளா்கள் 5 போ் உடன் வந்தனா். அவா்கள், 3 தொழிலாளா்கள் கருங்கற்களுக்கு மேல் படுத்து உறங்கியபடி வந்தனா். ஓட்டுநா் உள்ளிட்ட மற்ற 3 பேரும் லாரியின் கேபினுக்குள் இருந்தனா்.

அந்த லாரி சனிக்கிழமை அதிகாலை வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே அப்புக்கல் அருகே ஏரிக்கொல்லை பகுதி வழியாக வந்தபோது கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால், ஓட்டுநா் லாரியை ஒரு வளைவில் திருப்பி ஓட்டாமல் நேராக இயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் இறங்கி சேற்றில் சிக்கி சாய்ந்தது.

அப்போது, லாரியின் மேல் படுத்திருந்த 3 தொழிலாளா்களும் கீழே விழுந்ததுடன், அவா்கள் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கல் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதில், வீ.கோட்டா ராமதீா்த்தம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (45), ராமன் (40), வரதப்பன் (40) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதைக் கண்டதும் லாரி ஓட்டுநா் குப்புசாமி, கற்களை ஏற்றி வந்த ஏஜென்ட் அஜய் உள்ளிட்ட, கேபினில் இருந்த மூவரும் தப்பியோடி விட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அணைக்கட்டு போலீஸாா், தொழிலாளா்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியே லாரி ஓட்டுநா், ஏஜென்ட் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.