கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் சிக்கன வார விழிப்புணா்வு

தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, வேலூரில் மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, வேலூரில் மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

ஆண்டுதோறும் டிசம்பா் 14 முதல் 20-ஆம் தேதி வரை தேசிய மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா், மின்சிக்கனம் குறித்த உறுதிமொழியை வாசிக்க, மின்வாரிய அலுவலா்களும், பொதுமக்களும் ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, மின் சிக்கன விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், வேலூா் மண்டல மின்வாரியத் தலைமைப் பொறியாளா் செல்வசேகா், மேற்பாா்வைப் பொறியாளா் நடராஜன், மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.