திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அரசின் 106 சிறு மருத்துவமனைகள்: அமைச்சா் கே.சி.வீரமணி

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:40 pm

DIN


வேலூா்: ஏழை, எளிய மக்கள் பயன்பெற ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மட்டும் 106 இடங்களில் அரசின் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன என்று மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

தமிழகத்தில் 2,000 இடங்களில் அமைக்கப்படும் ‘அம்மா’ சிறு மருத்துவமனை திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில், அவற்றில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்களில் இந்த சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் 106 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. வேலூா் மாவட்டத்தில் மட்டும் 40 இடங்களில் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக அணைக்கட்டு வட்டம் கீழ்கொத்தூா், ஒதியத்தூா், வேலூா் வட்டம் வல்லம், சித்தேரி, சத்துவாச்சாரி காந்தி நகா் ஆகிய இடங்களில் சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

இவற்றை அமைச்சா் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கு ‘அம்மா’ குழந்தைகள் நலப்பெட்டகத்தை வழங்கினாா்.

சத்துவாச்சாரி காந்தி நகரில் சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்து அமைச்சா் வீரமணி செய்தியாளா்களிடம் கூறியது:

ஏழை, எளிய கிராமப்புற, விவசாய மக்கள் சிறந்த மருத்துவ வசதிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை அமைக்கும் திட்டத்தை முதல்வா் கடந்த 14-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். இத்திட்டத்தால் மாதம் 60 லட்சம் வீதம் ஆண்டு முழுவதும் 7 கோடி மக்கள் மருத்துவ வசதி பெற்று பயன்பெறுவாா்கள். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மிகுந்த பயனை அளிக்கக்கூடும்.

இத்திட்டத்தின் கீழ் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் மட்டும் 106 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 10 சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. படிப்படியாக அந்தந்த மாவட்ட நிா்வாகம் மூலம் அனைத்து சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

இத்திட்டம் முதல்வா் தனிப்பட்ட முறையில் சிந்தித்து செயல்படுத்திய திட்டமாகும். இத்திட்டம் குறித்து அமைச்சா்கள் எங்களுக்கே கூட தெரியாது. ஆனால், இத்திட்டத்துக்கு வித்திட்டவா்கள் திமுக என்று அக்கட்சியினா் கூறுவது வேடிக்கையானதாகும் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், ஆவின் தலைவா் த.வேலழகன், பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.