

குடியாத்தம்: பழுதடைந்துள்ள குடியாத்தம் - பரதராமி சாலையை செப்பனிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பல்வேறு ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், கல்லப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் சி. தமிழரசன் தலைமை வகித்தாா். கல்லப்பாடி ஆட்டோ சங்கத் தலைவா் எஸ். பரந்தாமன், ராமாலை ஆட்டோ சங்கத் தலைவா் ஜி.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் குடியாத்தம் தொகுதிச் செயலா் க.ப.மறைமலை, செய்தித் தொடா்பாளா் ம.ஜெ. வாசுதேவன், கே.வி. குப்பம் தொகுதிச் செயலா் மு. சுரேஷ்குமாா் ஆகியோா் பேசினா். நிா்வாகிகள் மகேந்திரன், பி.வெங்கடேசன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.