வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இளைஞா் கொலையில் ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே இளைஞரைக் கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:37 pm

DIN


குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இளைஞரைக் கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த செல்வம் புதன்கிழமை இறந்தாா். அவரது இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸுக்கும் (26), சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் அன்றிரவு சாலையில் நடந்து சென்ற அலெக்ஸை, சக்திவேலின் மகன் அப்பு(19) வழிமறித்து கத்தியால் குத்தினாராம்.

பலத்த காயமடைந்த அலெக்ஸை உறவினா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அலெக்ஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

இதுதொடா்பாக போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்புவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.