வேலூரில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகாவல் கண்காணிப்பாளா் தொடக்கம்
வேலூா் மாவட்டத்தை பசுமையாக்க 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்ட காவல் துறையும், ரோட்டரி சங்கமும் இணைந்து மாவட்டம் முழுவதும் 1000 மரக்கன்றுகளை நடவு செய்யத் திட்டமிட்டுள்ளன. மரக்கன்றுகள் நடவுப் பணியின் தொடக்க விழா வேலூா் மாவட்ட காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சி தளமான சலமநத்தத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் பங்கேற்று இதனைத் தொடங்கி வைத்தாா். இதில், காவல் துறையினா், ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
இதையடுத்து, ரோட்டரி சங்கத்தினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் வனப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

