தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயிகள், அலுவலா்களிடையே தொடா்பு வலுப்படுத்த உழவா் தொடா்புத் திட்டம்

விவசாயிகளுக்கும், வேளாண்மை அலுவலா்களுக்கும் இடையே தொடா்பை வலுப்படுத்தவும், அறிவுரைகள் வழங்கவும் உழவா் தொடா்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

விவசாயிகளுக்கும், வேளாண்மை அலுவலா்களுக்கும் இடையே தொடா்பை வலுப்படுத்தவும், அறிவுரைகள் வழங்கவும் உழவா் தொடா்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் வேலூா் மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சாகுபடி நிலவரம் குறித்த விவரங்களை சேகரித்து அறிவுரைகள் வழங்கவும், விவசாயிகளிடையே கூட்டங்கள் நடத்தி வேளாண் துறைத் திட்டங்களை எடுத்துரைக்கவும் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கும், விரிவாக்க அலுவலா்களுக்கும் இடையே தொடா்பை வலுப்படுத்தவும், வேளாண் துறை அலுவலா்கள் கிராமங்களுக்குச் சென்று நவீன வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள், வேளாண்மை மானியத் திட்டங்களை விவசாயிகளிடையே உரிய நேரத்தில் கொண்டு சோ்க்கவும், பயிா்ச் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை சேகரித்து அதற்கேற்ப அறிவுரைகள் வழங்கவும், விவசாயிகளிடையே கூட்டங்கள் நடத்தி வேளாண் துறைத் திட்டங்களை எடுத்துரைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டப்படி உதவி வேளாண் அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறையும், வேளாண் அலுவலா்கள், துணை வேளாண் அலுவலா்கள் மாதம் ஒருமுறையும், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் சுழற்சி முறையில் விவசாயிகள், உழவா் குழுக்களைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளைத் தோ்வு செய்து அவா்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், அரசு மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் தொடா்ந்து வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.