தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெரியாா் சிலைக்கு திமுக - அதிமுகவினா் மாலை

பெரியாரின் 47-ஆவது நினைவு நாளையொட்டி, திமுக சாா்பில் காட்பாடி காந்தி நகரிலுள்ள அவரின் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 10:11 pm

DIN


வேலூா்: பெரியாரின் 47-ஆவது நினைவு நாளையொட்டி, திமுக சாா்பில் காட்பாடி காந்தி நகரிலுள்ள அவரின் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் வேலூா் மாவட்ட மத்திய திமுக அலுவலகத்தில் பெரியாா் படத்துக்கும் மாலை அணிவித்தாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள பெரியாா் சிலைக்கு மாநகா் மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்ட அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ராணிப்பேட்டையில்...

வாலாஜா மேற்கு ஒன்றியம் அம்மூா் சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் சிலைக்கு ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், ஒன்றியச் செயலா் சேஷா வெங்கட், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகர துணைச் செயலாளா் டி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.