காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சாலை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறை சாலை பணியில் உள்ள 5 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சாலை பணியாளா்கள் வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள்.
Updated on
1 min read

வேலூா்: நெடுஞ்சாலைத் துறை சாலை பணியில் உள்ள 5 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சாலை பணியாளா்கள் வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா்கள் சரவணன் (வேலூா்), ஏழுமலை (திருவண்ணாமலை), சரவணன் (செய்யாறு) ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம், துணைப் பொதுச் செயலா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சிவசங்கா் வரவேற்றாா்.

இதில், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com