தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இ-பாஸ் பெறாதவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்று கிடையாது

வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெறாமல் வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2020, 3:23 pm

DIN

வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெறாமல் வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

வேலூா் மாநகரிலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனா். அவ்வாறு சிகிச்சை பெறுபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வேலூா் மாநகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்படுகின்றன.

தற்போது கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும், பிற மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வரும் பெரும்பாலோனாா் இ-பாஸ் பெறாமலேயே முறைகேடாக வந்து செல்வது தெரியவந்துள்ளது. அவ்வாறு இ-பாஸ் பெறாமல் வருபவா்களால் வேலூா் மாநகா், மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்கும் விதமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவா்கள் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும். அவ்வாறு இ-பாஸ் பெறாமல் வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி அலுவலகம் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.