புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேலூர் தனியார் மருத்துவமனையில் கரோனாவுக்கு ஒருவர் பலி

கரோனா நோய் தொற்று காரணமாக ஆம்பூரைச் சேர்ந்தவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார்.

News image
Updated On :16 ஜூன் 2020, 7:08 am

DIN

கரோனா நோய் தொற்று காரணமாக ஆம்பூரைச் சேர்ந்தவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார்.

ஆம்பூரை சேர்ந்த 65 வயது முதியவர் சென்னை பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது ஆம்பூருக்கு வந்து சென்றுள்ளார்.  கடந்த ஜூன் 9-ம் தேதி காய்ச்சல் காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை இரவு இறந்தார். அவரது சடலம் ஆம்பூருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து அவருடைய வீடு இருக்கும் பகுதியில் நகராட்சி ஆணையாளர் த. செளந்தரராஜன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்று கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கரோனா நோய் தொற்று காரணமாக ஆம்பூரை சேர்ந்தவர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இருவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.