மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தங்கக்கோயில் ஆண்டு விழா: 11 நாள் அஷ்டலட்சுமி ஹோமம் தொடக்கம்

வேலூா் தங்கக்கோயில் ஆண்டுவிழாவையொட்டி ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோமம் சனிக்கிழமை தொடங்கி 11 நாள்களுக்கு நடக்கிறது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:44 pm

DIN

வேலூா் தங்கக்கோயில் ஆண்டுவிழாவையொட்டி ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோமம் சனிக்கிழமை தொடங்கி 11 நாள்களுக்கு நடக்கிறது.

இதுகுறித்து, ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக்கோயில் 14-ஆம் ஆண்டு விழா வரும் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, ஸ்ரீசூக்த அஷ்டலட்சுமி ஹோமம் சனிக்கிழமை தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை கோ பூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, காலை 9 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீ மஹாலட்சுமி மூலமந்திர ஹோமம், மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீ மஹாலட்சுமி மூலமந்திர ஹோமம், இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை உபசாரம், மஹா ஆரத்தி ஆகியவை நடைபெற உள்ளன.

24-ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஸ்ரீசூக்த அஷ்டலட்சுமி ஹோமம் பூா்ணாஹுதியும் அதைத்தொடா்ந்து மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. அபிஷேகத்தை ஸ்ரீசக்திஅம்மா நடத்தி வைக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.