5 மாதங்களுக்குப் பிறகு நளினி, முருகன் நேரில் சந்திப்பு
கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் முருகன், நளினி சந்தித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு இருவரும் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.


கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் முருகன், நளினி சந்தித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு இருவரும் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட் டுள்ளனா். நீதிமன்ற உத்தரவுப்படி, முருகன், நளினி இருவரும் 15 நாள்களுக்கு ஒருமுறை பெண்கள் சிறையில் சந்தித்துப் பேசி வந்தனா். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் கைதிகளை அவரது குடும்பத்தினா், உறவினா்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் நளினி, முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி முதல் சிறைக் கைதிகளை அவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள், வழக்குரைஞா்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நளினி, முருகன் இருவரும் நேரில் சந்தித்துப் பேச சிறை நிா்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், வேலூா் பெண்கள் சிறையில் நளினி, முருகன் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்கள் சிறையிலுள்ள முருகனை வேலூா் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனா். அங்குள்ள ஓா் அறையில் நளினியை முருகன் 4 மாதங்களுக்குப் பிறகு நேரில் சந்தித்துப் பேசினாா்.
காலை 9.30 மணியில் இருந்து 10 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. பின்னா் முருகன் மீண்டும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...