தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூரில் 37 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

வேலூரில் 37 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

வேலூா், சலவன்பேட்டையைச் சோ்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த சிறுமிக்கும், பாகாயம் பகுதியைச் சோ்ந்த 37 வயது இளைஞருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனா். அதன்படி, சாத்துமதுரை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலா் முருகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினா் அந்த சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அந்த சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது உறுதியானது. உடனடியாக அந்த திருமணத்துக்கு தடை விதித்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனா். சிறுமிக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று சிறுமியின் பெற்றோரிடம் உறுதிமொழி பத்திரமும் எழுதி வாங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.