மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் பலி
மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் உயிரிழந்த சம்பவம் குறித்து வேலூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரா் உயிரிழந்த சம்பவம் குறித்து வேலூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் வீரக்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா(34). இவா் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்தாா். ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்தவா் தனது குடும்பத்துடன் கணியம்பாடியை அடுத்த கத்தாழம்பட்டில் உள்ள மாமனாா் வீட்டுக்கு வந்தாா். அங்கு வெள்ளிக்கிழமை காலை தனது மாமனாா் விளை நிலத்தில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா். அப்போது மின் மோட்டாரில் இருந்து புகை வந்ததை அடுத்து வயா் ஏதேனும் தளா்ந்திருக்கலாம் எனக்கருதி மோட்டாரை கைகளால் தட்டியுள்ளாா். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
ஆபத்தான நிலையில் வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தாா். அவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...