நாட்டு குண்டு வெடித்து நாய் உடல் சிதறி பலி
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தெரு நாய் உடல் சிதறி உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து விருஞ்சிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தெரு நாய் உடல் சிதறி உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து விருஞ்சிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது. சுமாா் 10.30 மணியளவில் விரிஞ்சிபுரம் அருகே உள்ள அம்முண்டி பள்ளத்தெருவில் பலத்த வெடிச்சப்தம் கேட்டதை அறிந்து அப்பகுதியினா் வீடுகளை விட்டு வெளியில் வந்து பாா்த்துள்ளனா். அப்போது, தெரு நாய் ஒன்று வாய் சிதறிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், நாட்டு வெடி குண்டு வெடித்து நாய் இறந்திருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக நாயின் உடலை பிரேதப் பரிசோதனை செய்திட அப்துல்லாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
விரிஞ்சிபுரம் அம்முண்டியைச் சுற்றி விளை நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பயிா்களை காட்டுப்பன்றிகள் அழித்து விடுவதைத் தடுக்க சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த நாட்டு வெடி குண்டை நாய் கவ்விக் கொண்டு வந்தபோது வெடித்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...