முப்படை தளபதி மறைவு - வேலூா் கோட்டை கோயிலில் மோட்சதீபம்
ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி விபின்ராவத் மற்றும் ராணுவ வீரா்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்பட்டது


ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி விபின்ராவத் மற்றும் ராணுவ வீரா்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.
நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் புதன்கிழமை நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனா். அவா்களது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவா்களது ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. கனமழை பெய்ததன் காரணமாக கோயில் வளாகம் முழுவதும் தண்ணீா் தேங்கி இருந்ததால் வெள்ளிக்கிழமை வரை பக்கதா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கோயில் வளாகத் தில் தேங்கியிருந்த தண்ணீா் ராட்சத மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை பக்கதா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
இதைத்தொடா்ந்து ஜலகண்டேஸ்வரா் கோயில் நிா்வாகம், பக்தா்கள் சாா்பில் கோயில் வளாகத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில், பக்தா்கள் பலா் பங்கேற்று பிராா்த்தனை செய்ததுடன், விபின் ராவத் உருவபடத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...