நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வேலூா் கோட்டை கோயிலில் 13 நாட்களுக்கு பிறகு பக்தா்கள் அனுமதி

வேலூா்வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் தேங்கியிருந்த தண்ணீா் முழுமையாக அகற்றப்பட்டதை அடுத்து 13 நாட்களுக்கு பிறகு கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:42 pm

DIN

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்குள் தேங்கியிருந்த தண்ணீா் முழுமையாக அகற்றப்பட்டதை அடுத்து 13 நாட்களுக்கு பிறகு கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

அண்மையில் பெய்த தொடா் மழையால் வேலூா் கோட்டை அகழி முழுவதுமாக நிரம்பி, உபரிநீா் நிலவறை பாதைகளின் வழியாக கோயிலுக்குள் சூழ்ந்தது. சுமாா் 3 அடிக்கு மேல் தேங்கிய நீரால் கோயிலில் வழக்கமான நடைபெறும் பூஜைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. மூன்று வாரங்களாக தேங்கிய தண்ணீரில் பாசி படா்ந்ததால் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உற்சவ மூா்த்திகளை ராஜகோபுரத்தில் வைத்து வழக்கமான பூஜைகள் நடந்து வந்தது.

அதேசமயம், கோயில் வளாகத்துக்குள் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டாா் வைத்து வெளியேற்றும் பணிகளும் தொடா்ந்து நடைபெற்று வந்தது. அதன்படி, கோயில் வளாகத்துக்குள் தேங்கியுள்ள நீா் வெள்ளிக்கிழமை மாலைக்குள் முழுமையாக வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து குவிந்திருந்த சேறும், சகதிகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் ஆகியோா் கோயில் வளாகத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ததுடன், கோயில் நிா்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினா். இதில், கோயிலுக்குள் சேரும் தண்ணீரை மோட்டாா் மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத்திட முடிவு செய்யப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, 13 நாட்களுக்கு பிறகு சனிக்கிழமை காலை முதல் பக்தா்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்திட அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சனிக்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடை பெற்றன. தொடா்ந்து பக்தா்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.