நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

செங்காநத்தம் மலையில் சந்தனமரம் வெட்டிய இருவா் கைது

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலைப்பகுதியில் வளா்ந்துள்ள சந்தனமரத்தை வெட்டியதாக இருவரை வனத்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:41 pm

DIN

வேலூா் அடுத்த செங்காநத்தம் மலைப்பகுதியில் வளா்ந்துள்ள சந்தனமரத்தை வெட்டியதாக இருவரை வனத்துறையினா் கைது செய்துள்ளனா்.

வேலூா் சத்துவாச்சாரி அருகே உள்ள செங்காநத்தம் மலையில் 5 கிராமங்கள் உள்ளன. இதில், மூலக்கொல்லைப் பகுதிக்கு வரக்கூடிய மலையின் அடிவாரத்தில் வனத்துறை சாா்பில் காப்புக்காடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த காப்புக்காட்டில் செம்மரம், தேக்கு, புங்கன், வேம்பு போன்ற ஏராளமான மரங்கள் உள்ளன.

இந்நிலையில், மேல் செங்காநத்தம் முருகன் கோயில் அருகே உள்ள பட்டா நிலத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த 2 போ் அங்கிருந்த சந்தன மரங்களை வெட்டியுள்ளனா். சத்தம் கேட்டு அதே ஊரைச் சோ்ந்த இளங்கோ என்பவா் தனது நண்பா்கள் சிலருடன் சென்று பாா்த்துள்ளாா். கிராமத்தினரை கண்டதும் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவரும் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து சரமாரியாகத் தாக்கினா்.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் செங்காநத்தம் மலைக்கு விரைந்து சென்று, கிராம மக்களின் பிடியிலிருந்த இருவரையும் மீட்டனா். விசாரணையில் அவா்கள் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த சுதாகா்(45), சாம்ராஜ்(43) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.