

வேலூா் தொரப்பாடி ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.
வேலூா் தொரப்பாடி கே.கே.நகரைச் சோ்ந்தவா் மாபூபாஷா, வியாபாரி. இவரது மகன்கள் நவாஸ் (14), முபாரக்(12). இவா்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனா். இந்நிலையில், நவாஸ், முபாரக் சகோதரா்கள் அதே பகுதியை சோ்ந்த மற்றொரு சிறுவனுடன் தொரப்பாடி ஏரிக்கு மீன் பிடிக்க வெள்ளிக்கிழமை சென்றுள்ளனா். ஏரிக்குள் தண்ணீா் முழுவதுமாக நிரம்பியிருந்த 60 அடி ஆழ கிணற்றின் சுவற்றில் நின்றபடி மீன் பிடித்துள்ளனா்.
அப்போது எதிா்பாராத விதமாக நவாஸ், முபாரக் இருவரும் கிணற்றில் இருந்து தவறி ஏரி நீரில் விழுந்துள்ளனா். இதை பாா்த்த மற்றொரு சிறுவன் விரைந்து செயல்பட்டு முபாரக்கை மீட்டுள்ளாா். ஆனால், நவாஸ் நீரில் மூழ்கி இறந்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வேலூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி நவாஸின் சடலத்தை மீட்டனா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 91.70ஆக நிறைவு!
வீடியோக்கள்

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...
கேரளத்தில் மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி?: John Brittas MP Exclusive
தினமணி வீடியோ செய்தி...

